அவுஸ்திரேலியாவில் கோர விபத்தில் சிக்கிய தமிழ் தம்பதியினர்! கணவருக்கு ஏற்பட்ட பரிதாபம்
அவுஸ்திரேலியா - விக்டோரியா மாநிலத்தின் வடக்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மெல்பனிலிருந்து 142 கிலோ மீற்றர் தொலைவில் - Bendigo பிராந்தியத்தில் அமைந்துள்ள - Toolleen என்ற இடத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனமொன்று படகினை கட்டியிழுத்துக்கொண்டு வடக்கு நெடுஞ்சாலை பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, வீடொன்றிலிருந்து வெளியே வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் மாணிக்கம் இரட்ணவடிவேல் (வயது 68) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,அவரது மனைவி படுகாயங்களுடன் மெல்பன் Alfred வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றைய வாகனத்திலிருந்த பயணியொருவர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
