பிரித்தானியாவின் சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவராக தமிழர் தெரிவு
பிரித்தானியாவின் சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவராக லண்டனில் சட்டத்தரணியாக பணி புரியும் சொலிசிட்டர் ஜனா தனபாலசிங்கம் இம்முறை தெரிவு செய்யப்படுள்ளார்.
சேம்பர்ஸ் அண்ட் பார்ட்னர்ஸ் ( Chambers and Partners ) எனும் அமைப்பினால் பிரித்தானியாவில் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிறந்த சட்டத்தரணிகளின் பட்டியலிலேயே இவர் இடம்பிடித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு தரவரிசைப்படுத்தும் உலகின் முன்னணி அமைப்பான Chambers and Partners என்னும் அமைப்பு இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் உள்ள வழக்கறிஞர்கள் இந்த அமைப்பினால்
வருடாந்தம் ஆய்விற்குட்படுத்தப்பட்டு நான்கு வீதமான சட்டத்தரணிகள் மாத்திரம் தெரிவு செய்யப்படுவார்கள்.
அந்த வகையில், லண்டனில் உள்ள முன்னணி சட்ட நிறுவனங்களில் ஒன்றான யோர்க் சட்ட நிறுவனத்தை ( York Solicitors ) சொலிசிட்டர் தீபன் ஆரோக்கியதர் அவர்களுடன் இணைந்து ஆரம்பித்து சட்டத்தரணி ஜனா தனபாலசிங்கம் நடாத்தி வருகின்றார்.
இதேவேளை, சட்டத்தரணி ஜனா தனபாலசிங்கம் அண்மையில் பிரித்தானிய மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்ட முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றை நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
https://chambers.com/lawyer/jana-dhanabalasingam-uk-1:26212865
கீழ்நிலை நீதிமன்றங்கள் சாட்சியங்களை அணுகும் முறை தொடர்பில் பிரித்தானிய மேன் முறையீட்டு நீதிமன்றம் புதிய விதிமுறைகளை வழங்கியமையே இவ்வழக்கின் முக்கியத்துவமாகும்.இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது பிரித்தானியாவின் தீர்ப்பு சட்டங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கையின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பணிபுரிந்த சட்டத்தரணி ஜனா
தனபாலசிங்கம் இலங்கையிலும் பல முன்னணி மனித உரிமை மீறல் மற்றும் வர்த்தக
சட்டம் தொடர்பான வழக்குகளில் ஆஜரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 5 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
