25 ஆண்டுகளுக்கு பின்னர் கனடா பொலிஸாரின் வலையில் சிக்கிய தமிழர்
கனடாவில் துஸ்பிரயோக வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை 25 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனடா - ஒஷாவா பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே 25 ஆண்டுகளுக்கு பின்னர் ரொறன்ரோ பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல் 1996 வரையான காலப்பகுதியில் பல்வேறு சிறார் துஸ்பிரயோக செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன்,9 முதல் 14 வயதுடைய சிறார்களை துஸ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒக்டோபர் 28ம் திகதி, அரசகுமார் சவரிமுத்து மீது உத்தியோகப்பூர்வமாக 13 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,குறித்த நபரினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து தமது முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You My Like This Video

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
