தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்றையதினம் தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.
இன்று (18) காலை 9 மணியளவில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டம்
இந்நிலையில், முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களிற்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |