தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்: தென்னிலங்கையில் விளம்பரம்...!
நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க போகும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரமானது நாடாளாவிய ரீதியில் பேசுபொருளாக இருந்து வந்தது.
இலங்கை அரசியல் களத்தில் தமிழ் பொது வேட்பாளர் என்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்த அறிவிப்பு மிகச் சாதாரண முறையில் இடம்பெற்று முடிந்துள்ளது.
அந்தவகையில், தமிழ் பொதுவேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் போட்டியிடப் போவதாக நேற்று (08) ஒரு சாதாரண ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இது பொதுவேட்பாளர் தொடர்பில் ஆர்வம் காட்டி வந்த சிவில் தரப்புக்களினதும் தமிழ் கட்சிகளினதும் மக்கள் ஆதரவில் உள்ள பலவீனத்தை காட்டுவதாக பார்க்கப்படுகின்றது.
தேர்தல் குறித்து இது வரை காலமும் தென்னிலங்கையில் இடம்பெற்று வரும் பிரசாரங்களுக்கு மத்தியில் தமது ஆளணி பலத்தை காட்டாத தமிழ் கட்சிகளின் ஒரு பலவீனமாக இது திகழ்கின்றது.
இந்நிலையில், மக்கள் ஆதரவை அம்பலப்படுத்தி காட்டாத தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri