தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடலாம் - நண்பர்களை வரவேற்கிறேன்: மனோ எம்பி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுக்கள் இடம் பெற்று வரும் நிலையில் கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிட்டால் உங்களுடைய கட்சியின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமா என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசு கட்சி
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசு கட்சியை கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை . இலங்கையில் கட்சிகள் என்ற வகையில் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் போட்டியிடாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது அவர்களின் ஜனநாயக உரிமை அவர்கள் எங்களுடைய நண்பர்கள் அவர்களை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri