தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தொடர்பில் பல உண்மைகளை அம்பலப்படுத்தும் சட்டத்தரணி
இலங்கை தமிழரசுக் கட்சி மிக நீண்டதொரு பாரம்பரியத்தை கொண்ட கட்சியாக இருந்து வருகின்றது. இதுவரைக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்பட்டதில்லை, தேர்தல் ஊடாக தமிழரசுக் கட்சிக்கு ஒரு தலைவர் தெரிவு செய்யப்படும் முதன் முறையாக இது இருக்கின்றது என சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான உமாகரன் ராசையா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சிக்கு தேர்தல் ஒன்றின் மூலம் புதிய தலைவர் ஒன்று தெரிவு செய்யப்படவுள்ளமை இலங்கையை பொறுத்தமட்டிலும் கூட ஒரு புதிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஒட்டுமொத்த தமிழ் சமூகமும், ஏன் ஒட்டுமொத்த இலங்கையும் இதனை உற்றுநோக்குவதற்கான காரணம் பிரசித்திப் பெற்ற வட்டுக்கோட்டை பிரகடனத்தை முன்வைத்தது இந்த தமிழரசுக் கட்சிதான்.
இதுவரைக்கும் நடந்த சாத்வீக போராட்டங்களாக இருந்தாலும் சரி ஆயுதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் அடித்தளம் இட்டது இந்த தமிழரசுக் கட்சிதான்.
தமிழர் தாயகப் பரப்பில் கடந்த ஒரு தசாப்தத்திற்குள் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளும், தீர்மானங்களும், நடவடிக்கைகளும் தமிழர்களின் நன்மை தீமைகளுடன் பிண்ணிப் பிணைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தொடர்பிலும் பல உண்மைகளை உமாகரன் ராசையாக அம்பலப்படுத்தினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri