தவராசாவிடம் ஒப்பம் எடுத்த தமிழரசு கட்சி: எச்சரித்த மனைவி
தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியத்தின் ஊடாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது. இவ்வாறான காரணிகளே கட்சியிலிருந்து வெளியேற காரணம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி தேசியப்பட்டியலில் தவராசாவின் பெயர் முதலில் குறிப்பிடப்பட்டு அவற்றில் ஒப்பமிடுமாறு மாவை சேனாதிராஜா தொலைப்பேசியில் தனக்கு அழைப்பு விடுத்த நிலையில், அவருக்கே தெரியாது பின்னர் பெயர் மாற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து 20 ஆம் திகதி தேசியப்பட்டியலை தேர்தல் ஆணையகத்தில் கையளித்த பின்னர் ஊடக சந்திப்பினை நடத்திய சுமந்திரன் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனின் பெயர் முதலில் பெயரிடப்பட்டு்ள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தேசியப்பட்டியலில் இருந்து எனது கணவனின் பெயர் நீக்கப்பட்டமைக்கு பொருள் அல்ல எனவும், நான் இல்லாவிட்டாலும் எனது கணவரை விட உங்களுக்கு மோசமான நிலை ஏற்படும் என்பதினை குறித்துவைத்துக்கொள்ளுமாறும், சுமந்திரன் இருக்கும் வரை தமிழரசுக்கட்சி உருப்படாது எனவும் மாவை சேனாதிராஜாவை மறைந்த சட்டத்தரணி கௌரி சங்கரி எச்சரித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அரசியல் பயணம் தொடர்பில் அவர் தெரிவித்த பல கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |