இலங்கையுடனான பேச்சுவார்த்தை கூடிய விரைவில் நிறைவு செய்யப்படும்:நாணய நிதியம்
இலங்கைக்கு நிதியுதவியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளை கூடிய விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா(Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், அவர் இந்த இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு செல்ல தயாராக இருக்கின்றனர்.
இலங்கை எரிபொருள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும் இவை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது எனவும் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா கூறியுள்ளார்.