உக்ரைன் வெற்றியடைந்த பின்னரே ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சு- ஜனாதிபதியின் ஆலோசகர்
ரஷ்யாவிற்கு எதிரான பாரிய மோதல்களுக்கு உக்ரைன் தயாராக உள்ளது என்று உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னர், மொஸ்கோ கட்டுப்படுத்தும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் மொஸ்கோ படைகளை உக்ரைன் முறியடிக்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் உக்ரைன் மிகவும் சக்திவாய்ந்த பேச்சுவார்த்தை நிலையைப் பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றியின் பின்னரே இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.