இலங்கை இந்திய எட்கா உடன்படிக்கை தொடர்பில் மேலும் இரு சுற்றுப்பேச்சுகள்
எட்கா (ETCA) என்ற இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முன்மொழியப்பட்ட இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில், இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் இந்த வாரம் மற்றொரு சுற்று பேச்சுக்களை நடத்தினர்.
எனினும் மருத்துவ ஏற்றுமதி உட்பட்ட நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு சுற்றுகள் தேவை என்று இரண்டு தரப்புக்களும் தெரிவித்துள்ளன.
வர்த்தக ஒப்பந்தம்
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக, இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது.
இது, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கியது.
சுங்க ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக வசதி, வர்த்தக தீர்வுகள் மற்றும் தாவர சுகாதார நடவடிக்கைகள் உட்பட பல அத்தியாயங்கள இதில் உள்ளடங்கியுள்ளன.
தற்போதைய நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளன.
சுகாதாரத்துறை
எனினும் இந்தியா புதிதாக முன்மொழிந்துள்ள சுகாதாரத்துறை தொடர்பான முன்மொழிகள் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
இந்தப்பேச்சுவார்த்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி தொடர்பான சில ஒழுங்குமுறை செயல்முறைகள் மற்றும் விலைக் கொள்கைகளில் ஒருமித்த கருத்தை பிரதிநிதிகள் குழுவினர் விரும்புகின்றனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மருத்துவ வல்லுநர்கள், மருந்துத் தொழில்துறை மற்றும் தொடர்புடைய அமைச்சகம் உட்பட உள்ளூர் சுகாதாரத் துறையுடன் மேலதிக ஆலோசனைகள் தேவைப்படும் என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது
ஏற்கனவே இலங்கைக்கான மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா செயற்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |