தேர்தலை ஒத்திவைத்தவர்கள் 13வது திருத்தச்சட்டம் பற்றி பேசுவது கேலிக்குரியது-நாமல் ராஜபக்ச
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்தவர்கள் தற்போது 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் பற்றி பேசுவது கேலிக்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மாகாண சபைத் தேர்தல் பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் பற்றி தற்போது பேசுவோரே அந்த தேர்தலை ஒத்திவைத்தனர்.
அதேவேளை நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எதிர்கால பயணம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடி, அதில் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பதவிகளை பெறுவது பற்றி எண்ணக்கூடாது
இதற்காக கட்சி என்ற வகையில் மீள ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நாங்கள் தவறுகளை செய்திருக்கலாம். நாங்கள் தவறின்றிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாங்கள் கட்சியினருடன் முன்நோக்கி செல்ல வேண்டும். பதவிகளை பெறுவது குறித்து எண்ணக்கூடாது. நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
