ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்! உலக நாடுகளுக்கு தலிபான் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆண்டு கைப்பற்றி தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளதுடன், பெண்களுக்கு எதிராக பல தடைகளை தொடர்ச்சியாக விதித்து ஆட்சியமைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றதுடன், இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
உலக நாடுகளுக்கு தலிபான் அமைப்பு எச்சரிக்கை
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது.
"சுதந்திரமாக இல்லாமல் வளர்ச்சியடைய முடியாது. கடவுளுக்கு நன்றி, நாங்கள் இப்போது ஒரு சுதந்திர நாடாக இருக்கின்றோம். எங்களுக்கு வெளிநாடுகள் உத்தரவுகளை வழங்கக்கூடாது. இது எங்கள் அமைப்பு, எங்களுக்கு எங்கள் சொந்த முடிவுகள் உள்ளன எனவும் ஆப்கானிஸ்தானின் மூத்த மத தலைவர் மவுலாவி ஹெபதுலா அகுந்த்ஸாதா உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
