துபாய் செல்லும் மாணவிகளை தடுத்து நிறுத்திய தலிபான்கள்
உயர்கல்விக்கான உதவித்தொகை பெற்று துபாய்க்கு புறப்பட்ட 100 மாணவிகளை தலிபான் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை மூலம் அனுமதி பெற்றவர்களுக்கு பயணம் செய்ய தாலிபான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அல்ஹப்தூர் குழுமத்தின் நிறுவனர் தலைவரான கலாஃப் அஹ்மத் அல் ஹப்தூர் (Khalaf Ahmad Al Habtoor) மாணவர்களின் கல்வி, தங்குமிடம், பயணம் மற்றும் உடல்நலக் காப்பீட்டிற்கு நிதியுதவிகளை செய்துள்ளார்.
பெண்களுக்கான கல்வித்தடை
இந்நிலையில், மாணவிகள் கைது செய்யப்பட்டதற்கு அவர் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்நிலைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்விக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு, பலர் வெளிநாடுகளில் உயர் கல்வியை நாடியுள்ளனர்.
ஆனால், கணவர், தந்தை, சகோதரர் போன்ற ஆண்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் பெண்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, பயண மறுப்பு குறித்து தலிபான் நிர்வாகம் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
