இந்தியாவை நோக்கி தலிபான்கள்?
தலிபான் அமைப்பின் கரங்களில் இன்று ஆப்கானிஸ்தான் என்ற நாடு முற்றாக வீழ்ந்துவிட்டது என்கின்ற விடயமானது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவு, மனித உரிமைகள் அங்கு மீறப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடும், பெண்கள் அடக்கி ஒடுக்கப்படும் நிலை உருவாகிவிடும் என்ற இது போன்ற விமர்சனங்களைக் கடந்து இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தும்படியாக அமைந்துவிடும் என்பதுதான் உண்மை.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி என்பது எதிர்வரும் காலங்களில் இந்திய எதிர்கொள்ளவுள்ள மிக முக்கியமான ஆபத்தின் ஆரம்பமாக இருக்க போகிறது என்றும் கூறியல்நோக்கர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆப்கானித்தானில் தாலிபான்கள் ஆட்சியமைத்தால் இந்தியாவுக்கு எப்படியான ஆபத்து ஏற்படும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் இந்திய ஏர்லைன்ஸ் விமானக்கடத்தல் சம்பவம்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களின் கடும்போக்கை உலகிலுள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றார்கள். அந்தவகையில் இந்திய பெரும் சவாலை எதிர்கொள்ளும் காலம் தூரமில்லை என எச்சரிக்கிறார்கள்.