22 நாட்களாக காணாமல்போன பாடசாலை மாணவர்கள் கண்டுபிடிப்பு
தலவாக்கலை பகுதியில் கடந்த 22 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன மூன்று பாடசாலை மாணவிகள் மற்றும் பாடசாலை மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
காலி - மெட்டியகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை, கிரெஸ்வெஸ்டன் பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவரும், 14 வயதுடைய பாடசாலை மாணவனும் கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த நிலையில், பொலிஸார் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டு அவர்களை கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு காணாமல்போயிருந்த மாணவர்களில், ஆண் மாணவர் மற்றும் ஒரு மாணவி சகோதரர்கள் எனவும், மற்றைய இரண்டு மாணவிகளும் வீடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நான்கு மாணவர்களும் காலி, மெட்டியகொட பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொலைபேசி தரவுகளை ஆராய்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் பின்னர் நான்கு மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
