தலவாக்கலையில் இடம்பெற்ற மோதல் : இளைஞர் ஒருவர் கொலை
தலவாக்கலை ஹெலிரூட் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த மோதல் சம்பவத்தில் 3 இளைஞர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவஞானம் சஜீவன் என்ற 22 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இளைஞர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த இளைஞரின் சகோதரர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வட்டகொட மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் முரண்பாட்டு நிலைமையொன்று காரணமாக இந்த மோதல் இடம் பெற்றதாகவும் இந்த மோதலில் ஈடுபட்ட தரப்பினர் உறவினர்கள் எனவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
