அரசை தேர்தலுக்கு அழைத்துச் செல்வது கடினமான பணி:சஜித்
"அரசைத் தேர்தலுக்கு அழைத்துச் செல்வது பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்கு ஒப்பான கடினமான பணியாகும்."என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17.11.2022) உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,"தேர்தலை நடத்துவதற்கு அரசமைப்பின் பிரகாரம் எந்தவித தடையும் இல்லை. ஆனால், அரசு பக்கம் ஒரே ஒரு தடையே இருக்கின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்படுதல்
தேர்தல் முடிவு தொடர்பிலான சந்நிதியில் தாம் தோல்வியடைய முடியும் என்ற அரசின்
மெய்சிலிர்க்க வைக்கும் அச்சமே இதற்குத் தடையாகவுள்ளது.
எனவே, அரசை தேர்தலுக்கு அழைத்துச் செல்வது பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்கு ஒப்பான கடினமான பணியாகும்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் நாட்டைத் தவறாக வழிநடத்த வேண்டாம்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் பிரதமர் மக்களையும் நாட்டையும் தவறாக வழிநடத்தும் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அறிவிப்பாகும்"என தெரிவித்துள்ளார்.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
