வலுக்கும் தையிட்டி விவகாரம்: அநுரவை திசை திருப்பிய அர்ச்சுனா எம்.பி

Sri Lankan Tamils Tamils Gajendrakumar Ponnambalam
By Shadhu Shanker Feb 04, 2025 01:57 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசை திருப்ப முயற்சித்ததாக காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வாய்திறக்காமல் இருந்தது மிகப் பெரிய பிழையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை எழுப்பியபோது கட்டாயமாக அவருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எட்டப்படாத தீர்வு

போராட்டம் கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் நடந்து வருகின்றது. நானும் அதில் இணைந்துகொண்டுள்ளேன். இதுவரைக்கும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் எமக்கான ஒரு சாதகமான சமிக்ஞை கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் கிடைக்கவில்லை.

வலுக்கும் தையிட்டி விவகாரம்: அநுரவை திசை திருப்பிய அர்ச்சுனா எம்.பி | Taiyitti Controversy Didnt Support Gajendrakumar

இம்முறை ஜனாதிபதி யாழ். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வரும்போது ஏதாவது சாதகமான சமிக்ஞை வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம். இது குறித்து நாங்கள் பல தரப்புடனும் பேசியிருந்தோம்.

ஆளுநரிடம் முறையிட்டிருந்தோம், ஆளுநர் எங்களை சந்தித்து பேசியவேளை சாதகமான விதத்திலேயே பதில் சொல்லியிருந்தார். தீர்க்கப்படவேண்டிய விடயம் என தெரிவித்திருந்தார்.

போனமுறை கூட்டத்தில் கூட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்களின் பிரதிநிதியாக எங்களின் பிரச்சினையை அந்த இடத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

அதேபோல கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் கூட இது தவறான கட்டிடம் அகற்றப்படவேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இந்தமுறை கூட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை ஜனாதிபதியை நோக்கி மிகவும் தாழ்மையான முறையில் முன்வைத்தார்.

அதனை ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாகவே நாங்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தோம்.

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்து வடக்கு கிழக்கில் போராட்டம்

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்து வடக்கு கிழக்கில் போராட்டம்

இராமநாதன் அர்ச்சுனா

அந்த சந்திப்பில் பிரதேச செயலர் ,ஆளுநர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டிய மிக முக்கியமான நபரான ஜனாதிபதியிருந்தார், எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ தளபதிகள் என அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.

வலுக்கும் தையிட்டி விவகாரம்: அநுரவை திசை திருப்பிய அர்ச்சுனா எம்.பி | Taiyitti Controversy Didnt Support Gajendrakumar

அந்த இடத்தில் ஜனாதிபதி விரும்பியோ விரும்பாமலோ ஒரு தீர்வை அல்லது பதிலைமுன்வைக்கவேண்டிய இக்கட்டான நிலையை நெருங்கிக்கொண்டிருந்தபோது,அதில் திடீரென குறுக்கே புகுந்த இராமநாதன் அர்ச்சுனா, இந்த பிரச்சினையை நஷ்டஈடு வழங்கி தீர்த்துக்கொள்ளலாம், இவர்களின் அரசியல் செல்லுபடியாகாது என தெரிவித்தமையானது, மிகுந்த மனவேதனையை தருகின்றது.

மக்களின் பிரதிநிதியாகிய நீங்கள் மக்களின் பிரச்சினையை ஒரு பொது வெளியில்கதைக்கின்றீர்கள் என்றால், பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பாடியிருக்கவேண்டும், கதைத்திருக்கவேண்டும்.

எம்முடன் அவர் எந்த வித தொடர்பையும் பேணவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுடன் எந்த தொடர்பையும் பேணவில்லை, அவர்களை தொடர்புகொள்ளவில்லை, மேலும் ஜனாதிபதி கருத்துகூற முற்பட்டவேளை அதில் குறுக்கிட்டு திட்டடமிட்டு திசைதிருப்பியாகவே நான் கருதுகின்றேன்.

அந்த இடத்தில் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதும் மிகுந்த விரக்தி ஏற்படுகின்றது ஏனென்றால் நாங்கள் தனித்தனியாக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கின்றோம் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்திருக்கின்றோம் இராணுவ அதிகாரிகளையும் சந்தித்திருக்கின்றோம்.

அனைவரும் எங்களை தனித்தனியாக சந்திக்கும்போது இது உங்களிற்கு நடந்த மிகப்பெரிய அநீதி என தெரிவித்தார்கள், பௌத்த மதகுருமார்களையும் சந்தித்திருக்கின்றோம் அவர்களும் இது உங்களிற்கு நடந்த மிகப்பெரிய அநீதி என தெரிவித்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்கள்: அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்கள்: அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

 தீர்வு அவசியம் 

பௌத்த மதத்தை முறையாக பின்பற்றும் எவரும் இந்த அநீதியை முன்னெடுக்க முடியாது, இது தீர்க்கப்படவேண்டிய விடயம், நாங்கள் ஜனாதிபதியிடம் இது குறித்து அழுத்தங்களை பிரயோகிப்போம் என தனித்தனியாக தெரிவித்திருந்தார்கள்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட இது தீர்க்கப்படவேண்டிய விடயமே எனகூறியவர்கள், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை எழுப்பியபோது கட்டாயமாக அவருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும்.

வலுக்கும் தையிட்டி விவகாரம்: அநுரவை திசை திருப்பிய அர்ச்சுனா எம்.பி | Taiyitti Controversy Didnt Support Gajendrakumar

அர்ச்சுனா இராமநாதன் குறுக்கிட்டபோது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களிற்கான தீர்வு அவசியம் என்ற விடயத்தை ஒருமித்த குரலாக முன்வைத்திருந்தால், ஜனாதிபதியின் வாயிலிருந்து உறுதிமொழியோ தீர்வுதிட்டம் வெளியாகியிருக்கும் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கலாம்.

ஆளுநரும் ஜனாதிபதிக்கு சந்தர்ப்பமொன்றை கொடுத்திருக்கலாம்,இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப்போகின்றீர்கள் என்ற கேள்வியை தானும் எழுப்பியிருக்கலாம். மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் சார்பாக தான் வாதிடவேண்டும், மக்களின் உண்மை பிரச்சினையை எழுப்பியிருக்கவேண்டும்.

ஆனால் அவர்கள் அரசபக்கம் நின்று செயலாற்றுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது. அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசைதிருப்பியதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்திறக்காமல் விட்டதும் மிகப்பெரிய பிழையாகும்.

இந்த விடயத்தை நீங்கள் ஒரு கட்சி பிரச்சினையாக பார்க்ககூடாது. அரசியல்வாதியென்பவர் மக்களிற்கானவர். மக்களுக்காக அரசியல்வாதியொருவர் அந்த இடத்தில் வந்து நிற்க்கும்போது அதனை அரசியல் என தெரிவிப்பதை நான் எந்த இடத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மகிந்த மகன் கைதுக்கு காரணமாகும் டெல்லி விவகாரம்

மகிந்த மகன் கைதுக்கு காரணமாகும் டெல்லி விவகாரம்

You may like this.. 


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US