திலித்துடன் கைகோர்த்த தஹாம் சிறிசேன மற்றும் ராஜிக விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிக விக்ரமசிங்க ஆகியோர் இன்று (03) மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வைத்து அவர்கள் தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்க, தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட மற்றும் தெதிகம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி நியமனங்கள்
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனா, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளராக சமிந்து குமாரசிங்கவும், கண்டி மற்றும் உடுநுவர மாவட்ட இணைப்பாளராக தக்சில பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கண்டி ஹேவாஹெட்ட அமைப்பாளராக சஞ்சீவ சுரவீரவும், கண்டி யட்டிநுவர அமைப்பாளராக தக்சில செனவிரத்னவும் ரத்கம அமைப்பாளராக துசித திலங்க ஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
