இறுதிப் பந்துவரை பரபரப்பு:வெற்றி வாகை சூடியது இந்திய அணி
2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா அணி மற்றும் பாகிஸ்தான் அணி ஆகியன மோதிக்கொண்டன.
பாகிஸ்தான் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
வெற்றி இலக்கு 160 ஓட்டங்கள்...
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக ஸான் மசூத் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்தியாவின் பரபரப்பான துடுப்பாட்டம்
பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
7ஆவது ஓவரில் இந்தியா 4ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கை வெறும் 31 ஓட்டங்களாக இருந்தன.
இதன் காரணமாக இந்தியா தோல்வி அடையலாம் என பரவலாக கருதப்பட்டது. ஆனால், தோல்வி பாதையில் இருந்த இந்தியா விராட் கோலி, ஹார்திக் பாண்டியா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் 36 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.