இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த தமிழ் இளைஞர்
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது.
முதலில் துடுப்பாட்டம்
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
சிறந்த பந்துவீச்சி
இதனையடுத்து, 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க எட்டு ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
சாதனை
இதேவேளை இன்றைய போட்டியில் புதிய சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் சென்னையை சேர்ந்த தமிழ் இளைஞரான கார்த்திக் மெய்யப்பன் இன்று சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இலங்கை அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றி ஹெட்ரிக் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இது 2022, 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஹெட்ரிக் சாதனையாகும்.
கார்த்திக் 2019 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.