உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை வீரர் பெற்ற முதலிடம்
உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு தெரிவாகியுள்ள அணிகளின் விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி, முதலாம் குழுவில் அயர்லாந்து,ஆப்கானிஸ்தான்,அவுஸ்திரேலியா,இங்கிலாந்து,இலங்கை மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், இரண்டாம் குழுவில் சிம்பாப்வே,பங்களாதேஷ்,இந்தியா,நெதர்லாந்து,பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
இலங்கை அணியின் வெற்றி
முதலாம் குழுவின் கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் நமீபியாவை இலங்கை அணி வீழ்த்தியது. இதனையடுத்து 2022 ஐசிசிஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதலாம் குழுவில் இலங்கை முதலிடம் பிடித்ததுள்ளது.
இலங்கை அணியின் சுப்பர்-12 சுற்று ஆட்டங்கள் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றன.
வனிந்து ஹசரங்க முதலிடம்
இதேவேளை இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர்- 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான சுற்று போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக வனிந்து ஹசரங்க தெரிவாகியுள்ளார்.
வனிந்து ஹசரங்க 3 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இந்த 3 போட்டிகளில் 63 ஓட்டங்களை வழங்கியுள்ளதுடன் ஒரு ஓட்டமற்ற ஓவரையும் வீசியுள்ளார்.