இஸ்ரேலுக்கு துணை போனதாக சிரிய ஜனாதிபதி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
சிரியாவின் (Syria) ஜனாதிபதி பஷார் அல் அசாத், தான் உயிர் தப்புவதற்காக, இஸ்ரேலிடம் இராணுவ இரகசியங்களை விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஷார் அல் அசாத் தான் உயிர் தப்பி, சிரியாவை விட்டு வெளியேறுவதற்காக தனது நாட்டின் இராணுவ இரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிரியாவின் இராணுவ தளபாட சேமிப்பகங்கள் குறித்த தகவல்களையே அவர் இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
தளபாட சேமிப்பகங்கள்
மேலும், இந்த தகவல் கசிவின் அடிப்படையிலேயே இஸ்ரேல் தற்போது அந்த இராணுவ தளபாட சேமிப்பகங்களை குறிவைத்து குண்டுத்தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிரிய ஜனாதிபதி தொடர்பான குறித்த பரபரப்பு தகவலை துருக்கி நாட்டை சேர்ந்த ஊடகம் ஒன்றின் விமர்சகரே வெளிளிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், சிரிய ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறும் போது அவரின் விமானம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது எனவும் பஷார் அல் அசாத் உத்தரவாதம் பெற்றுள்ளதாகவும் குறித்த விமர்சகர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் சிரிய ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் விரைவில் பதில் எதுவும் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |