கிளிநொச்சி உமையாள்புரத்தில் வாள்வெட்டு: ஒருவர் பலி - மூவர் தீவிர சிகிச்சை பிரிவில்
கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. உமையாள்புரம் கிராமத்தினை சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலையே வாள்வெட்டில் முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் மேலும் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.


நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri