கிழக்கில் தொடரும் வாள்வெட்டு : ஒருவர் பலி - போராட்டத்தில் குதித்த மக்கள்
இரவு வேளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் பகிரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை என்கின்ற இடத்திலேயே கடந்த 16.01.2026 அன்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த தாக்குதல் சம்பவம் 16.01.2026 அன்று இரவு, மரணித்த இந்த நபர் தனது சொந்த வயலில் இருந்த வேளையிலேயே, குழுவாகச் சென்ற நபர்கள் இவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் அடித்தும் தாக்கியதில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு 20 நாட்கள் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(04.01.2026) மரணித்துள்ளார்.

இந்நிலையில் இன்று(05.02.2026) இவ்வாறு மரணமடைந்தவரின் பிரதேத்தைச் சுமந்தவாறு உறவினர்கள் இறந்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தையில் வீதியியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரேதத்தை வந்தாறுமூலை பொது மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

