பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்
பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் வைத்து மாலை 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது பின்னால் வந்தவர்கள், வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கியதில் சத்தமிட்டுள்ளார்.
விடுதியில் நின்ற அவரின் தந்தை உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதில் மேலாக ஏறி வந்த ஒரு அடையாளம் தெரியாத குழுவினரே இந்த தாக்குதலை நடத்திச் சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தவிசாளர் மாற்றம் ஏற்பட இருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri