ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
ஜேர்மனியில் வுவர்ஸ்பேர்க் பகுதியில் சோமாலிய நாட்டவர் ஒருவர் மூன்று பேரைக் கத்தியால் குத்திக்கொன்றதுடன், ஆறு பேர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பெண்கள் காயமடைந்துள்ளனர். இதன்போது,கத்திக்குத்துக்கு இலக்கான அனைவரும் பெண்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்தை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் 24 வயதுடையவர் என்றும், இவர் சோமாலியில் இருந்து குடியேறியவர் என்றும்,கடந்த காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு காயமடைந்த பெண்களில் சிறுபிள்ளையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபரின் கைத்தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றபட்டுள்ளதுடன், அதில் வெறுக்கத்தக்க குறுந்தகவல்கள் காணப்பட்டதாகவும் இவர் பெண்களை மாத்திரம் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினரா என்பதில் தெளிவு இல்லை என்றும் பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வறுமை மற்றும் யுத்தம் காரணமாக மில்லியன் கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு தமது எல்லையை ஜேர்மன் திறந்தது.இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் சந்தேகநபர் வுவர்ஸ்பேர்க் நகரில் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
#Germany: 2 people dead and multiple injured in stabbing attack at Barbarossaplatz in #Wuerzburg, Germany. pic.twitter.com/1LVY5LKrjE
— Nikhil Choudhary (@NikhilCh_) June 25, 2021