யாழில் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டுத்தாக்குதல்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது இன்றிரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் மீதே இவ்வாறு வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது கடையை மூடிய பின்னர் காங்கேசன்துறை வீதி ஊடாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது மனோரா திரையரங்குக்கு அருகில் வைத்து வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளியான தகவல்
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன்,முன்பகை காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam