திருகோணமலையில் வாள்வெட்டு தாக்குதல்: மூவர் வைத்தியசாலையில்
திருகோணமலையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சோலையடி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதிலேயே இச்சம்பவம் இன்று (29.03.23) இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
காயமடைந்த மூவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குறித்த மூவரையும் உப்புவெளி பொலிஸார் வைத்தியசாலைக்கு
சென்று பார்வையிட்டதுடன் தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
