முல்லைத்தீவில் வாள்வெட்டு தாக்குதல்! பெண் ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் கிராமத்தில் இன்று கும்பலொன்று வீடொன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வள்ளுவர்புரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த உந்துருளிகள்,பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன் வாள்வெட்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது 24 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதி சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் தொடர்பில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டாக மாறியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.




