யாழில் இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!
யாழ். அச்சுவேலி - மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று இளைஞரொருவர் மீது வன்முறைக்குழுவொன்று துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தியுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்திருந்த நிலையில் மற்றைய குழுவை சேர்ந்தவர்கள் அவரை துரத்தி துரத்தி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவனே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan