பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்! - பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் தாக்குதல்தாரி பலி
பிரான்ஸ் - Colombes (Hauts-de-Seine) நகரில் இன்று மாலை (உள்ளூர் நேரம்) பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் தாக்குதல்தாரி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Boulevard Charles-de-Gaulle பகுதியில் நின்றிருந்த பொலிஸார் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். மாலை 6.20 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகளை நோக்கி ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்டுக்கொண்டு அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளாதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த தாக்குதல்தாரி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
COLOMBES - Un homme armé d’un couteau a été neutralisé après avoir menacé des policiers.
— Clément Lanot (@ClementLanot) October 22, 2021
Touché par balle à la cuisse, il a été pris en charge par les secours. pic.twitter.com/LpmXGYyRst

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
