மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல் : குழந்தை உட்பட மூவர் படுகாயம்!
மட்டக்களப்பு- ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி- தீர்த்தகரை வீதியிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே இடம்பெற்ற பண கொடுக்கல் வாங்கலையடுத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மூவர் படுகாயம்
இதனையடுத்து, பெண்ணின் உறவினரான ஆண் பெண்மீது வாளால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதையடுத்து பெண்ணும் அவரது ஒரு வயது குழந்தையும் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையும் அவரது தாயாரும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எல்லை தாண்டிய மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள்
மேலதிக விசாரணை
அதேவேளை குறித்த பெண்மீதும் அவரது குழந்தை மீதும் தாக்குதலை நடாத்தியவர் காயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
