சுவிட்சர்லாந்து ஞானலிங்கேச்சுரத்தில் கொண்டாடப்பட்ட தமிழ்ப்பொங்கல்
சுவிட்சர்லாந்து(Switzerland) பேர்ன் ஐரோப்பாத்திடலில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் முற்றத்தில் பொங்கல் விழாவும் திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பும் மிக சிறப்புடன் 14ஆம் திகதி கொண்டாடப்பட்டுள்ளது.
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் செந்தமிழ் வழிபாடு நடைபெற்று, சுவிற்சர்லாந்து மக்களுடன் இணைந்து பேர்ன் மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பொங்கல் குளவையிட்டு, "பொங்கலோ பொங்கல்" என்ற குலவையுடன் தமிழர் திருநாளை -6 பாகை பனிக் குளிரில் கொண்டாடியுள்ளனர்.
முக்கிய நிகழ்வுகள்
நகரபிதா அலெக்ஸ் பொன் கிறாப்பென்றீட்டை வரவேற்று, அவருக்கு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் சார்பில் பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் , முருகருசி சிவலிங்கம் சுரேஸ்குமார் ஆகியோர் வைநெறிக்கூடத்தின் சார்பாளராக நகரபிதாவிற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
சிவருசி. சசிக்குமார் நகரபிதாவை வரவேற்று உரையாற்றுகையில், சைவத் தமிழர்கள் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் சாம்பலை பேர்ன் ஆறே நதியில் கரைக்க அரசின் அனுமதி பெற அலெக்ஸ் பங்காற்றியமை அளகப்பரியது எனக்குறிப்பிட்டு, சைவநெறிக்கூடத்தின் சார்பில் பேர்ன் மாநகர சபைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சிறப்பு நிகழ்ச்சிகள்
தமிழிலும் ஜேர்மன் மொழியிலும் பொங்கல் வாழ்த்து கூறிய நகரபிதா அலெக்ஸ், உலகின் பல பாகங்களிலும் கடந்த 2024 ஆண்டின் போர்ச்சூழல் மற்றும் இழப்புக்களை நினைவுகூர்ந்து, இந்த ஆண்டில் உலகில் அமைதி நிலவ வேண்டும் எனத் தனது வாழ்த்தினை குறிப்பிட்டுள்ளார். இந்த கோவில் எனது உள்ளத்திற்கு மிகவும் பிரியமானது.
உங்கள் பண்பாட்டை நீங்கள் பேணுவதும் ஒற்றுமையுடன் வாழ்வதும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டதெ தொடர்ந்து மாலை 06.00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.
அத்துடன், குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. சுடரோன் கொடுநுகம் புகும் (மகரசங்கராந்தி) சிறப்பு வழிபாடு மற்றும் ஐயப்பன் திருவுலா வழிபாடு நடைபெற்று இந்த நிகழ்வு நிறைவுபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |