சுவிட்சர்லாந்து பிரபல வங்கியின் அதிரடி முடிவு! வேலையை இழக்கும் ஆபத்தில் 3000 மேற்பட்டோர் (VIDEO)
சுவிட்சர்லாந்தின் பிரபல வங்கியின் அதிரடி முடிவினால் வேலையை இழக்கும் ஆபத்தில் 3000 மேற்பட்டோர் உள்ளதாக சுவிட்சர்லாந்தின் பல்சமய இல்லத்தின் பிரதி தலைவரும்,சமூக ஆர்வலருமான தி.சிவகீர்த்தி தெரிவித்துள்ளார்.
சுவிஸ் கிரிடிட் வங்கியின் வீழ்ச்சியின் காரணமாக சவுதி அரேபியாவின் தேசிய வங்கியின் உதவியை நாடி முதலீடுகளை மேற்கொண்ட நிலையில்,சரிபாதி முதலீட்டாளர்களாக சவுதி வங்கி அமைந்திருந்தது.
இவ்வாறான நிலையில்,சவுதி அரேபியாவின் தேசிய வங்கி செய்த முதலீட்டின் எதிர்பலனாக பெரும்பாலானவர்கள் பணி நீக்கம் செய்யப்படவும்,முகாமைத்துவ கட்டமைப்பினை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இதற்கமைய,3000-3500 பேர் வரையில் வங்கி பணிகளை இழக்கும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
