வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி!
சுவிட்சர்லாந்தின் ஐ.நா. இளைஞர் பிரதிநிதியாக, ஈழத்து பெண் ஹனிஷா சூசை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹனிஷா சூசை, சுவிட்சர்லாந்தின் ஐ.நா. இளைஞர் பிரதிநிதியாக நியூயார்க்கில் பணியாற்றுகிறார்.
இந்த பதவியை பெறும் முதல் ஈழத்து தமிழ்ப்பெண் என்பதில் பெருமை கொண்டிருக்கிறார்.
கல்வி
மாற்றுத் திறனாளி இளைஞர்களின் உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சமமாக கல்வியைப் பெறும் வாய்ப்புகளுக்காக அவர் போராடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈழத் தமிழராக இவர் பெற்ற பட்டபடிப்பு அறிவு, அனுபவங்கள் மற்றும் இவருடைய சமத்துவம் என்பன சமூகத்தின் மீதான பற்றுதலுக்கு அடித்தளமாயின என்று சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இவருடைய பெற்றோர் மற்றும் சமூகத்தின் தொண்டுபணிகள் ஹனிஷாவை சிறுவயதிலேயே ஊக்கப்படுத்தின. இதன் விளைவாக, ஈழத்தில் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலைகளுக்கு கொடை திரட்டுதல், ஏதிலிகளுக்கான குழந்தைகளுக்கு நத்தார் பரிசுகள் வழங்குதல் போன்ற பொதுப்பணிகளில் இளவயதில் தொண்டாற்ற ஈடுபட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹனிஷாவின் முதல் பெரிய பொது நடவடிக்கையானது, ஐ.நா.வில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மாநாடு ஆகும். இதற்கு முன்னர் இவ்வாறு சுவிற்சர்லாந்து சார்பில் இளைஞர் பிரதிநிதியும் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.
கல்வி தொடக்கத்திலிருந்தே எல்லோருக்கும் கிடைக்கும் வளமாக இருத்தல் வேண்டும், மனித உரிமைகள் அடிப்படையிலானதாகவும் கல்வி இருக்க வேண்டும் என ஹனிஷா வலியுறுத்தியுள்ளார்.
பன்னாட்டு மேடையைத் தவிர, ஹனிஷா உள்ளூர் மற்றும் சமூக நிலைகளிலும் தீவிரமாக செயல்படுகிறார்.
ஹனிஷாவின் கருத்து
பாடசாலைகளில் போதனை நடத்துகிறார், வேலைமுறைப் பட்டறைகள் நடத்துகிறார், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தொண்டு நிறுவனங்களிலும் செயல்படுகிறார் – உதாரணமாக, இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களின் உரிமைகளை காக்கும் "பெர்ல்" என்ற „Grassroots“ அமைப்பிலும் பணி ஆற்றுகின்றார்.
இதனடிப்படையில், அரசியல் என்பது ஒரு பதவியில் இருக்கவேண்டும் என்பதல்ல. அது ஒரு மாற்றத்தை உருவாக்கும் இடத்தில் செயல்படுவதாக இருக்க வேண்டும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஹனிஷா கல்வி, இடம்பெயர்வு கொள்கைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் மாற்றத்தை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ள இடங்களில் பணியாற்ற விரும்புவதாக ஒரு செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கொடும் யுத்தம், இனவாதம் ஈழத்தமிழர்களை விசையுறு பந்தாக உலகில் உந்தித் தள்ளி இருந்தாலும், புலம் விட்டு வேர் விட்ட தமிழர்களின் வழித்தோன்றல்கள் நாளை உலக அரசியல் மற்றும் சமூகத்தில் முடிவெடுக்கும் நிலைகளில், தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நல்வலுக்கொண்ட செயலின் விசையாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை விண்மீனில் ஒருவராக ஹனிஷாவும் ஒளிர்கின்றார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
