சுவிற்சர்லாந்தில் அறிமுகமான சுவிஸ் தமிழ் ஊடக மையம்

Tamils Switzerland World
By DiasA May 27, 2024 02:43 PM GMT
Report

சுவிற்சர்லாந்தில் (Swizerland), ஊடகத்துறை சார்ந்த மற்றும் ஆர்வம்மிக்க நண்பர்களின் சந்திப்புக்களின் வழியே தோற்றம் பெற்ற “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுகமானது.  

குறித்த ஊடக மையமானது, நேற்று (26.05.2024) சுவிற்சர்லாந்தின் பாசல் பிராந்தியத்துக்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட படி நிகழ்வு மிகச் சரியாக மாலை 4 மணிக்கு சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் மயூரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு

ஆரம்ப நிகழ்வுகள்

விழாச் சுடரினை சுவிற்சர்லாந்தின் சோசலீச ஜனநாயக கட்சியின் சொலத்தூன் மாநில Hofstellen - Flüh பகுதியின் கலை, கலாச்சாரப்பிரிவின் உறுப்பினர் சுலோஜன் சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

இது வரை காலமும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படத்துக்கான ஈகைச்சுடரினை சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்விச்சேவை மற்றும் 'Tess Care' மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் வினுசன் ஜெயரட்ணராசா ஏற்றி வைக்க ஊடகச் செயற்பாட்டாளர் கரன் மலர் வணக்கம் செலுத்தினார்.

swiss-tamil-media-center-launched-in-switzerland

தொடர்ந்து அகவணக்கமும் வருகை தந்தோரின் மலர் வணக்கமும் இடம்பெற்றது.  

தலைமையுரையினை சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் தலைவர் ஊடகவியலாளர் ஜெராட் நிகழ்த்தினார். அவர் உரையில் ஊடக மையத்தின் தோற்றம் பற்றியும் தேவை பற்றியும் செயற்பாடு பற்றியும் தொட்டுச் சென்றார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய நினைவுப் பேருரையினை சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் உபதலைவர் ஊடகவியலாளர் அசோக் நிகழ்த்தினார்.

சுவிற்சர்லாந்தில் அறிமுகமான சுவிஸ் தமிழ் ஊடக மையம் | Swiss Tamil Media Center Launched In Switzerland

வாழ்த்துரையினை பாசல் இந்து ஆலயத்தின் தலைவரும், பிறாத்தல்ன் நகரசபை உறுப்பினருமான குலசிங்கம் விக்னராஜா நிகழ்த்தியிருந்தார். அவர் தனதுரையில் ஊடகம் மற்றும் அரசியல் துறையில் இளைய தலைமுறையினர் தடம்பதிக்க வேண்டும் என்பதனையும் அதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தார்.

மூத்த ஊடகவியலாளருக்கான மதிப்பளிப்பு

சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து சுவிற்சர்லாந்தின் சோசலிச ஜனநாயக்கட்சியின் உறுப்பினராகி அரசியலில் தடம் பதிக்கும் சுலோஜன் சுந்தரலிங்கம் ஊடகத்துறையின் அவசியம் பற்றியும் ஊடகசுதந்திரம் பற்றியும் தனதுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இறுதியுத்தம் வரை முள்ளிவாய்காலில் இருந்து மீண்டு வந்த ஊடகவியலாளர் அமரதாஸ் சிறப்புரை ஆற்றியிருந்தார். சுவிஸ் ஊடக மையம் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமென தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

swiss-tamil-media-center-launched-in-switzerland

அதனைத் தொடர்ந்து “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” திட்டமிட்டபடி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மூத்த ஊடகவியலாளர்கள் மதிப்பளிக்கப்படுவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டு மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் அவர்கள் மதிப்பளிக்கப்படுவதற்காக தெரிவாகியிருந்தார்.

swiss-tamil-media-center-launched-in-switzerland

அவரது உடல் நலக்குறைவால் அவரால் சமூகமளிக்க முடியாது போயிருந்தது. அவருக்கான மதிப்பளிப்பினை ஊடகவியலாளர் அமரதாஸ் வழங்க ஊடகவியலாளர் அசோக் பெற்றுக்கொண்டார்.  

தொடர்ந்து “சுவிஸ் ஊடக மையம்” அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

நிறைவுகண்ட நிகழ்வு

இதன் தலைவராக ஜெராட், உபதலைவராக அசோக், செயலாளராக மதனராஜ், உபசெயலாளர் வின்ஸ்லோ, பொருளாளராக மயூரன் மற்றும் ஆலோசகராக ஊடகவியலாளர் கனகரவி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அறிமுகத்தினைத் தொடர்ந்து ஊடகவியலாளர் கனகரவி அவர்களின் அறிமுக உரை இடம்பெற்றது. அறிமுக உரையில் ஊடகத்துறையின் சவால்கள் பற்றியும் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் முன் விரிந்துள்ள பணிகள் பற்றியும் தொட்டுச் சென்றார்.

swiss-tamil-media-center-launched-in-switzerland  

சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் செயலாளர் மதன்ராஜ் அவர்களின் நன்றியுரையுடன் அரங்க நிகழ்வு திட்டமிட்ட படி மாலை 5.30 மணிக்கு நிறைவு கண்டது.

சிறிய சிற்றுண்டி இடைவேளையை தொடர்ந்து வருகை தந்தவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பல்வேறு கருத்துக்களையும் பல விடயங்கள் சார்ந்த தமது ஆதங்கங்களையும் முன் வைத்தார்கள்.

swiss-tamil-media-center-launched-in-switzerland

இவை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு அவை நோக்கி ஊடக மையம் செயற்படுமென குறிப்பிடப்பட்டது. அத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுகண்டது.  

திருகோணமலை மாவட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற தம்பலகாமம் பிரதேச அணி

திருகோணமலை மாவட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற தம்பலகாமம் பிரதேச அணி

யாழில் இடம்பெற்ற பனைத் திருவிழா

யாழில் இடம்பெற்ற பனைத் திருவிழா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Markham, Canada

15 Dec, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Gurunagar, ஆனைக்கோட்டை, Nienburg, Germany

15 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31st Day Remembrance & Thankyou Message

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, North York, Canada

11 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US