திருகோணமலை மாவட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற தம்பலகாமம் பிரதேச அணி
திருகோணமலை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியில் தம்பலகாமம் பிரதேச அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளது.
குறித்த போட்டியானது கந்தளாய் லீலரத்ன மைதானத்தில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
இந்த அணியானது உதைபந்தாட்டம், கரப்பந்து ஆகிய போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளதோடு இதில் தங்கப் பதக்கங்கள் 05, வெள்ளிப் பதக்கங்கள் 06, வெண்கலப் பதக்கங்கள் 03 பெற்றுள்ளனர்.
சிறந்த பயிற்சி
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்Lதலுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரிஸ் குறித்த விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த பயிற்சிகளை வழங்கி iவைத்துள்ளார்.

குறித்த போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
சாமிந்த ஹெட்டியாராச்சி, மாகாண விளையாட்டு பணிப்பாளர் யு.சிவராஜா உட்பட பலர்
கலந்து கொண்டனர்.



யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri