புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள மற்றொரு நாடு
சுவிட்சர்லாந்து (Switzerland) தற்பொழுது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நாட்டு மக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில், எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கபட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருகின்றது.
பிரித்தானியாவின் திட்டம்
இதற்கு முன்னர் பிரித்தானியா (United Kingdom) புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதன்போது, பிரித்தானியாவை சுவிட்சர்லாந்துப் பின்பற்றுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், சுவிட்சர்லாந்தின் திட்டம் பிரித்தானியாவின் திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைகின்றது.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களையும் ருவாண்டாவுக்கு அனுப்ப பிரித்தானியா விரும்புகின்றது.
அத்துடன் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பதையும் வேறொரு நாட்டிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் திட்டம்
ஆனால், சுவிட்சர்லாந்து, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட எரித்ரிய நாட்டவர்களை மட்டுமே ருவாண்டாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதுடன் தானே புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கின்றது.
அதாவது, எரித்ரியா நாடு திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தன் நாட்டவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
இதன் காரணமாகவே, சுவிட்சர்லாந்தில் வாழும் 300 எரித்ரிய நாட்டவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருகின்றது.
இந்த திட்டம் ஏற்கனவே சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவையின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம், நாடாளுமன்றத்தில் மேலவையில், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 32 நிமிடங்கள் முன்

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
