சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட உளவு விமானம் இந்தியா ஊடாக இலங்கைக்குள்: இராணுவ ஆய்வாளர் (Video)
சீன கப்பலின் வருகைக்கு கோட்டாபய அரசாங்கம் தான் முதலில் அனுமதி வழங்கியது.இதற்கான முதலாவது இராஜதந்திர எதிர்ப்பை இந்தியா தெரிவித்தது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்தியாவின் மறுப்பிற்கு காரணம் இந்த கப்பல் தான் சீனாவிடம் இருக்கும் மிக பெரிய உளவு கப்பல். இந்த கப்பல் ஊடாக இந்தியாவின் பாதுகாப்பு விடயங்கள் புலனாய்வு தகவல் தொடர்பில் அறிந்துகொள்ள வாய்ப்புகள் உண்டு என்பதாலே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
2011 ஆண்டிலிருந்து இந்தியா இலங்கையை தமது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அழுத்தத்தை மேற்கொண்டது. இதற்கமைய எம்.ஆர்.சி.சி என்ற நிலையத்தை மாலைதீவு, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து கொழும்பில் அமைத்தது.
அந்த நிலையத்திற்கு துணையாக உளவு விமானமும் அதற்கான பயிற்சியை வழங்க இந்திய வான் படையினர் இலங்கையில் தங்கி இருப்பார்கள் எனவும் கூறப்பட்டது. இதத்கமைய இந்த மூன்ற நாடுகளின் வான் படையும் இணைந்து உளவு பணியில் ஈடுபடுவார்கள் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு விமானமே தற்போது வழங்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.