விசா இல்லாத பயணம் ரத்து! சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் 2015, மே 25க்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டு வைத்திருக்கும் Vanuatu குடியரசின் மக்கள், இனி விசா இல்லாமல் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் ஒருபகுதியாக செயல்படும் சுவிஸ் பெடரல் நீதி மற்றும் பொலிஸ் துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதற்கான காரணமாக, Vanuatu குடியரசு, முதலீட்டாளர் குடியுரிமை திட்டம் அல்லது தங்க கடவுச்சீட்டு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருவது தான். இந்த திட்டத்தின்படி, ஒரு நாட்டில் பெரும் தொகை முதலீடு செய்வோருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம்
இந்த பிரச்சினை காரணமாக, Vanuatu குடியரசு, சரியாக ஒருவரது பின்னணியை ஆராயாமல், வெளிநாட்டவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவது தெரியவந்துள்ளது. குறித்த கடவுச்சீட்டினை வைத்திருப்போரால் Schengen பகுதிக்குள் விசா இல்லாமல் நுழையமுடியும்.
ஆகவே, இந்த நபர்களால் Schengen பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் Vanuatu குடியரசு அதிகாரிகளை இது தொடர்பில் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய குடியுரிமை திட்டம் அறிமுகம்
அந்நாட்டு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தாலும், பின்னர் 2021இல் மீண்டும் புதிதாக ஒரு குடியுரிமை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், தற்போது Vanuatu குடியரசு மக்கள், குறிப்பாக, 2015, மே 25க்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டு வைத்திருக்கும் Vanuatu குடியரசின் மக்கள், சுவிட்சர்லாந்துக்குள் விசா இல்லாமல் நுழைய அளிக்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளதுடன்,இந்த தடை, 2023 பெப்ரவரி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.