இலங்கைக்கு சுவிஸ் அரசு வழங்கிய மருத்துவ உபகரணங்கள்! பிரதமர் மகிந்த நெகிழ்ச்சி
இலங்கைக்கு நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை சுவிட்ஸர்லாந்து அரசு வழங்கியுள்ளது. இலங்கைக்கான சுவிஸ் தூதுவர், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் இதனை கையளித்துள்ளது.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த உபகரணங்களை பிரதமரிடம் கையளித்தார்.
கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொள்ளும் நோக்கில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுவிஸ் அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கோவிட் வைரஸ் சவாலை வெற்றிக் கொள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அப்போது தான் இச்சவாலை வெற்றிக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலையில் வைத்திய உபகரணங்கள் வழங்கியமைக்கு சுவிஸ் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச நெகிழ்ச்சியுடன் நன்றிகளை கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை தொடர்ந்து பலமிக்கதாக முன்னெடுத்து செல்வது பிரதான நோக்கமாகும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
