சுவிஸிலிருந்து சென்ற பயணிகள் விமானம் அவசரமாக தறையிறக்கம்
சுவிஸிலிருந்து சென்ற பயணிகள் விமானம் அவசரமாக தறையிறக்கம் சுவிட்சர்லாந்தில் இருந்து ஜேர்மனுக்கு செல்ல புறப்பட்ட விமான சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளன.
சூரிச் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை பெர்லினுக்கு சென்ற LX974 என்ற சுவிஸ் விமானமே அவரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் இன்று காலை 7.42இற்கு விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. எனினும் 18 நிமிடங்களில் குறித்த விமானம் மீண்டும் சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அவசரமாக தரையிறக்கம்
பல தீயணைப்பு வாகனங்களும் அங்கு விரைந்து சென்ற நிலையில், பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
விமானியின் அறையில் அசாதாரணமான வாசனை உணரப்பட்டதை அடுத்தே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, சுவிஸ் விமான நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.
தரையிறக்கப்பட்ட பயணிகள் சில மணி நேரங்களில் மற்றுமொரு விமானம் ஊடாக ஜேர்மன் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
