இலங்கை தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடு செய்த சுவிஸ் அரசு
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் ஒருதலைப்பட்சமான கைதுகள், துஸ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்களை விசாரணை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட நிறைவேற்றம் மற்றும் சட்ட முன்மொழிவுகள்
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுவிட்சர்லாந்து பிரதிநிதி ஜூர்க் லாவுபர் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படக் கூடிய சட்ட நிறைவேற்றம் மற்றும் சட்ட முன்மொழிவுகள் குறித்து எச்சரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து கரிசனை வெளியிட்டுள்ளது.
நிகழ்நிலை சட்டம்
இந்த சட்டம் அடிப்படை சுதந்திரத்தை முடக்கும் வகையில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதாக லவுபார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நிகழ்நிலை சட்டம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்த சட்டங்களை கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மனித உரிமைப் பேரவை ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |