தடைகளை மீறி ரஷ்யாவிற்கு ஆதரவாக களமிறங்கும் நாடு
ரஷ்யாவிற்கு ஆதரவாக நடவடிக்கையை எடுக்க சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ரஷ்யா மீது பல நாடுகள் தடைகள் விதித்தன.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை
அந்த நேரத்தில், சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளின் நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறின.
தற்போது ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டதையும் மீறி, ரஷ்யாவுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து களமிறங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
இதற்கமைய ரஷ்யா மீதான தடைகள் காரணமாக ரஷ்யாவை விட்டு வெளியேறிய பெரிய சுவிஸ் நிறுவனங்கள், மீண்டும் ரஷ்யாவுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளன.
Credit Suisse ஆய்வு நிறுவனம் இந்த தடை தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட சுவிஸ் நிறுவனங்களில் சுமார் 40 சதவிகித நிறுவனங்கள் ரஷ்யா மீதான தடைகள் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, சுவிட்சர்லாந்தின் நடுநிலைமையைப் பராமரித்தல், அந்தந்த நிறுவனங்களின் விருப்பதைப் பொருத்தது என ஆய்வில் பங்கேற்ற முக்கால் பங்கு நிறுவனங்களும் கருதுகின்றன.