இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
பதுளை - எல்ல பகுதியில் உள்ள ஹோட்டலின் குளியலறையில் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை இரகசியமாக எடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தபோது, யாரோ ஒருவர் தன்னை புகைப்படம் எடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்த முறைப்பாட்டினை அடுத்து எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதற்கமைய, பசறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தனியுரிமையை மீறுவது மட்டுமல்லாமல், இலங்கையின் சுற்றுலாத் துறையையும் பாதிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 6 மணி நேரம் முன்
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam