புத்தாண்டையொட்டி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரிகள் (Photos)
வவுனியா மாவட்ட செயலகம்
வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2024 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (01.01.2024) காலை 8.30 மணிக்கு மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர்.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
அதன் பின்னர் சமயத்தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(01-01-2024) புதிய ஆண்டை வரவேற்று
கடமைகளை பொறுப்பேற்கும் சத்திய பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது
புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 09 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு சத்திய பிரமாணத்தை தொடர்ந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் போது மாவட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் ஒன்றிணைந்து உழைப்போம் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நீதிமன்ற வளாகம்
கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்திலும் சத்திய பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(01-01-2023) நடைபெற்றுள்ளது.
காலை 09 மணிக்கு நடைபெற்ற சத்திய பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் நீதவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள், நீதவான் நீதிநீதிமன்ற உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு சத்திய பிரமாணத்தை செய்து கடமைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி்: யது
அம்பகமுவ பிரதேச செயலகம்
அம்பகமுவ பிரதேச செயலகத்தில் 2024 ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பித்தல் பொறுப்பேற்றல் நிகழ்வானது பிரதேச செயலாளர் சித்தாரா ருவணி கமகே அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (01.01.2024) காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது சமய அனுஷ்டானங்களும் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து தேசிய கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், உறுதிமொழி எடுத்தல், இராணுவம் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும், தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் அவர்களை உற்சாகம் ஊட்டும் முகமாக தலைமை உரையும் பிரதேச செயலாளரினால் நிகழ்த்தப்பட்டது.
செய்தி: திருமால்
மன்னார் நகரசபை
2024 ஆம் ஆண்டின் கடமைகள் மற்றும் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் காலை மன்னார் நகர சபையில் இடம் பெற்றது.
கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் மன்னார் நகர சபையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து "வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" என்ற அடிப்படையில் புதிய ஆண்டில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மையப்படுத்தி மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவதற்கு வினைத்திறன் மிக்க பணிகளை மேற்கொள்வோம் என்ற அடிப்படையில் சத்திய பிரமாணம் செய்து இவ்வருடத்தின் முதல் நாள் கடமைகளை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தனர்.
செய்தி: ஆஷிக்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை
புதிய ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் 10 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வெளியரங்கில் இன்று (01.01.2024) காலை சுகாதார ஊழியர்கள் சத்திய பிரமாணம் செய்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், மண்முனை வடக்கு பிராந்திய சுவார சேவை பணிப்பாளர், மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்தி: ருசாத்
காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையம்
2024 புத்தாண்டில் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸாரின் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வு இன்று(01.01.2024)காங்கேசன்துறையில் உள்ள பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்தண கமகே மற்றும் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி: தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
