வெளிப்படையான அரசியல் தேவை..! பிரகலாதன் வலியுறுத்தல்
அரசுகளும், ஆட்சியாளர்களும் மாறினாலும் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியும் மக்களின் வாழ்வியலும் மாற்றம் பெறவில்லை என தீவக முன்னேற்ற கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவக முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று(09.04.2026) வேலணையில் உள்ள கழகத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
வெளிப்படையான அரசியல் தேவை
அவர் மேலும் கூறுகையில்,
மக்களுக்கு இன்று(09) வெளிப்படையான அரசியலே தேவையாக இருக்கின்றது. ஆனால் ஆட்சிக்கு வரும் அரசுகள் கூறுவதை நடைமுறையாக்குவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது எமது மக்கள் தான்.

குறிப்பாக 90 களின் முன் செழிப்பும் வளமும் நிறைந்திருந்த எமது பிரதேசம், யுத்த சூழ்நிலையால் சிதைக்கப்பட்டு, வளங்களுடன் மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றி மக்களின் வாழ்வியல் மறுமலர்ச்சி பெற நாம் வலுவாக உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்பதாக தீவக முன்னேற்ற கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் தலைமையில் நடந்த குறித்த நிகழ்வில் களகத்தின் இலச்சினை வெளியிடப்பட்டிருந்ததுடன் அமரர் சுவாமிநாதன் ரேவதியின் நினைவாக ஒருதொகுதி அன்பளிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

