ஜனாதிபதி ஊடக பிரதானிக்கு எதிராக சுவர்ணவாஹினி ஊழியர்கள் போராட்டம்(Photo)
ஜனாதிபதியின் ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாரச்சிக்கு எதிராக சுவர்ணவாஹினி ஊழியர்கள் இன்று(04) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றும் சுதேவ ஹெட்டியாரச்சி, அந்த பதவிக்கு நியமிக்கப்பட முன்னதாக சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பணிப்பாளராக இருந்துள்ளார்.
போராட்டம்

அதன் பின்னர் ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட போதிலும், சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றது.
குற்றம்

இந்நிலையில் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி ஊழியர்களின் சம்பள முரண்பாடு விடயத்தில் அவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், தனக்கு விருப்பமானவர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் சுதேவ ஹெட்டியாரச்சி தொடர்ந்தும் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தில் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam